தூயர் நீங்களன்றோ

தூயர் நீங்களன்றோ... பாவி நாங்களன்றோ...
தூயர் நீங்களன்றோ... பாவி நாங்களன்றோ...

நீங்கள் ஸாஹே ஹரம்
நான் ஃபகீரே அஜம்
நீங்கள் உயர்வின் குணம்
நாங்கள் தாழ்ந்த இனம்
நீங்கள் இறையின் கொடை...
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

இல்ஹாமை உடையாய் அணிந்தவர்
குர்ஆனின் கருவாய் அமைந்தவர்
உங்கள் சிம்மாசனம் அர்ஷே அழீம்...
யா ரஹ்மத்தன் லில்ஆலமீன்...
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

யா ரஸூலே ஹுதா

யா ரஸூலே ஹுதா
யா ரஸூலே ஹுதா

கெஞ்சும் குரல் கேளுங்கள்
கொஞ்சம் முகம் பாருங்கள்
நீங்கள் காணாவிட்டால் எம்மை யார் காணுவார்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

நானும் உங்கள் மண்ணில் நின்று
காணும் பாக்கியம் தாருங்களேன்
என்னில் உள்ள குறை நீங்கனும்
என் கல்பில் உள்ள கறை போக்கணும்
யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்
                                                                                                        (யா ரஸூலே ஹுதா)

யா நபி யா நபி அன்த ஹைருன்னபி

யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி

உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி
உங்களைப் போல் இனி பிறக்க போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார்

யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி

யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்

யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்

யாரெல்லாம் நம் நபியின் காதலில் கரைவாரோ
அவர் மேல் காத்தம் நபியும் கருணை சொறிவார்கள்
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்
யாரஸூலல்லாஹ் அழைப்பீர் யாரஸூலல்லாஹ்

காதலரை ஏங்க வைக்கும் வழிமுறை
எழில் நபியின் ஏற்றமிகும் நடைமுறை
                                                                                                                      (யாரெல்லாம்)

நித்தியநபியின் நேசத்தில் உயிரை நீத்தவர்
நிச்சயம் நித்தியமான வாழ்வு பெற்றவர்
                                                                                                                      (யாரெல்லாம்)

அண்ணல் நபியின் அடிமை யாரோ அவர்தமக்கே
அகிலம் அனைத்தும் அண்ணலரின் அன்பளிப்பே
                                                                                                                      (யாரெல்லாம்)

நீதரின் நினைவு சிந்தையிலே சிறகடித்தால்
அர்ஷின் அளவில் மகிழ்ச்சியில் நானும் பறந்திடுவேன்
                                                                                                                      (யாரெல்லாம்)

பார்வையில் நான் பார்த்திபரை பார்த்துவிட்டால்
பதியினில் யாரையும் பார்ப்பதற்கே தேவையில்லை
                                                                                                                      (யாரெல்லாம்)

ஒளிமயமான வாழ்வும் தங்கள் ஈகையால்
உங்கள் உணவை உண்டே உங்களை புகழ்கின்றோம்
                                                                                                                      (யாரெல்லாம்)

நாயனின் தூதரின் நபிகள் நாதரின்

யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ்
யா நபியல்லாஹ் யா ஷபீயல்லாஹ்
நாயனின் தூதரின் நபிகள் நாதரின்
நன்மொழி கேளீரோ நயம்பட வாழீரோ

இறைகுர்ஆனும் நபி மொழியும்
இங்கவரீந்த இரு பொருட்கள்
திறனாய் அவற்றை பின் தொடர்ந்தால்
தீங்கே இல்லை இது நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

உடலே எரிந்து போனாலும்
உயிரே பிரிய நேர்ந்தாலும்
திடனாய் இணையே வையாமல்
திகழ்வீர் இதுவும் நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

வறியோர்க்கீயின் ஒரு நன்மை
உறவோர்க்கீயின் இரு நன்மை
நெறியை விளக்கும் அறவுறைகள்
நிகழ்த்தும் இதுவும் நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

உன்னை விடவும் பொருள் நிலையில்
உயர்ந்தோர் தம்மை கண்டுவிடின்
உன்னை விடவும் தாழ்ந்தோரை
எண்ணுக என்பதும் நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.