ரப்பி யஸ்சிர் அம்ரஹுஜ்அல் உம்ரஹு தூலல் ஹயாத்
நாஃபிஅன்லனா பிபரகதில் ஹபீபி முஹம்மதி
ரப்பி யஸ்சிர் அம்ரஹுஜ்அல் உம்ரஹு தூலல் ஹயாத்
நாஃபிஅன்லனா பிபரகதில் ஹபீபி முஹம்மதி

ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்

வாழ்க நீங்கள் என்றும் வாழ்க தாழ்வில்லாத வாழ்க்கையாக
ஆழ் கடல் அலைகளைப்போல் சூழ்ந்த நலன்கள் யாவும் பெற்று
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்

வல்லோன் அல்லாஹ் உங்களின் மேல் எல்லா நாளும் நல்லருளை
மெல்லப் பெய்யும் நில்லா மழையென அல்லும் பகலும் பொழிந்தருள்வான்
                                                                                                                                              (வாழ்க ...)

நல்லார் நபியும் எல்லா ஒலியும் அல்லல் அகற்றி செல்வம் பொழிவார்
புல்லர் உதவி நாடாவண்ணம் அல்லாஹ் அருள்தான் ஓடி வருமே
                                                                                                                                              (வாழ்க ...)

கற்கும் கல்வி பயன்தரவும் கற்றபடியே நிலை நிற்கவும்
நற்றவத்தார் துஆபெறவும் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றோம்
                                                                                                                                              (வாழ்க ...)

தர்பாஅப்பா பறகத்தினால் வறுமை இல்லா வாழ்வு மலரும்
சிறுமையில்லா பெருமைமிளிரும் நறுமை எல்லாம் நாடி வருமே
                                                                                                                                              (வாழ்க ...)

தர்பாஅப்பா தம் நழ்ரால் கர்மவினைகள் அழிந்து ஒழியும்
சர்மபிணிகள் விரைந்து நீங்கும் சர்வ உலகும் புகழ்ந்து ஏற்றும்
                                                                                                                                              (வாழ்க ...)

தர்பாஅப்பா தம்பொருட்டால் கர்பாம் கஷ்டங்கள் யாவும் நீங்கும்
சர்ப்பம் போன்ற பகையும் ஒடுங்கும் தர்பார் அரசும் தாழ்ந்துபணியும்
                                                                                                                                              (வாழ்க ...)

யாரஹீமல் முஃமீனீனக்பல் துஆ அப்தின் நபீ
அஹ்மதின் ஆலிவ் வஸஹ்பி தாபியீ கைரின் நபி
லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹு
லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் யாரப்பிஸல்லி அலைஹிவசல்லிம்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.