ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்
அலா தாஹா ரஸூலில்லாஹ்
ஸலாதுல்லாஹ் ஸலாமுல்லாஹ்
அலா யஸீன் ஹபீபில்லாஹ்
                                                                                                                          ( ஸலாத்துல்லாஹ் )

ஆளும் வல்ல இறையும் அவனின் அமரரெல்லாம் கூறிடும்
சூழுகின்ற துயரம் எல்லாம் சிதறி எங்கோ ஓடிடும்
நாளும் நமது நாவினாலே நவில இனிமை கூட்டிடும்
நாளை மஹ்ஷர் வேலை யினிலும் நமக்கு அதுவே உதவிடும்
                                                                                                                          ( ஸலாத்துல்லாஹ் )

மாந்தரினத்தை வாழவைக்க மாணலாகத் தோன்றினார்
நீந்தும் பாவக் கடலைக் கடக்க நெறிகள் பலவும் சாற்றினார்
சாந்த குணமே மேவும் எங்கள் செம்மல் தாஹா முஸ்தஃபா
ஏந்தலவரின் மீது இங்கே இனிய ஸலவாத் ஓதுவோம்
                                                                                                                          ( ஸலாத்துல்லாஹ் )

உள்ளமுவந்தே ஒருமுறைநாம் உரைக்கும் போதே நாயனும்
சொல்லுவானே பத்து முறைகள் சிறந்த ஸலவாத் ஆதலால்
வள்ளலந்த நபிகள் பேரில் வாஞ்சையோடு காலமும்
நல்ல ஸலவாத் அதனைச் சொல்லி நிறைந்த நன்மை எய்துவோம்
                                                                                                                          ( ஸலாத்துல்லாஹ் )

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.