ஹபீபி யா ரசூலல்லாஹ்! ஹபீபி யா ரசூலல்லாஹ்!
ஹபீபி யா ரசூலல்லாஹ்! ஹபீபி யா ரசூலல்லாஹ்!
ஹபீபி யா ரசூலல்லாஹ்! ஹபீபி யா ரசூலல்லாஹ்!

அணு தினம் என்னை அலைக் கழிக்க
பெரும் புயல்கள் எழும் போது
இன்புறச் செய்யும் நும் நாமம்
ஹபீபி யா ரசூலல்லாஹ்
                                                                                             ( ஹபீபி யா ரசூலல்லாஹ் )

பேரொளியைக் கொண்ட விளக்கொன்றால்
பாரோரின் உள்ளில் ஒளி யேற்றும்
சிராஜுல் முனீர் நீங்களன்றோ
ஹபீபி யா ரசூலல்லாஹ்
                                                                                             ( ஹபீபி யா ரசூலல்லாஹ் )

ஆருயிரே தங்கள் புகழ் கூறி
முடிக்க எவர்க்கும் முடியாதே
சீரான மக்கப் பதியரசே
ஹபீபி யா ரசூலல்லாஹ்
                                                                                             ( ஹபீபி யா ரசூலல்லாஹ் )

புகழை ஓதி முடியாதே
நும் புகழுக் கெல்லை கிடையாதே
புகழுக் குரியோன் புகழ்ந்தேற்றும்
ஹபீபி யா ரசூலல்லாஹ்
                                                                                             ( ஹபீபி யா ரசூலல்லாஹ் )

எத்தனைக் கெத்தனை பேரெல்லாம்
நித்தம் நும் அன்பை பெற்றனரே
அத்தகையோரில் எனை சேரும்
ஹபீபி யா ரசூலல்லாஹ்
                                                                                             ( ஹபீபி யா ரசூலல்லாஹ் )

காணும் பொருள்கள் அனைத்திலுமே
தோன்றிடக் காரணரே நபியே
நானுங்கள் குடும்ப ஊழியனே
ஹபீபி யா ரசூலல்லாஹ்
                                                                                             ( ஹபீபி யா ரசூலல்லாஹ் )

அடியார்க்குதவும் அல்லாஹ்வின்
கொடைகளனைத்திலும் பெருங் கொடையே
நெடியோன் ரஹ்மத்தாய் வந்தீர்
ஹபீபி யா ரசூலல்லாஹ்
                                                                                             ( ஹபீபி யா ரசூலல்லாஹ் )

பதறி எவரும் பயந் தொதுங்கும்
அந்நாள் இறை முன் பரிந்துரைப்பீர்
கதறி யாமும் உமை அழைப்போம்
ஹபீபி யா ரசூலல்லாஹ்

ஹபீபி யா ரசூலல்லாஹ்! ஹபீபி யா ரசூலல்லாஹ்!
ஹபீபி யா ரசூலல்லாஹ்! ஹபீபி யா ரசூலல்லாஹ்!
ஹபீபி யா ரசூலல்லாஹ்! ஹபீபி யா ரசூலல்லாஹ்!

English Version of this Qaseeda : Habeebi Yaa Rasoolullaah

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.