ஏன் என்னை மறந்தது ஏனோ
தங்க பூ முகம் பார்த்திட தானோ
நபி நாதர் உங்கள் துணையை காத்திருந்த மனதை
வாட விடுவதும் ஏனோ...

ஏன் என்னை மறந்தது ஏனோ
இந்த பாவியின் காரியம் தானோ
கண்ணின்மணி ஒளிவை காத்திருந்த மனதை
வாட விடுவதும் ஏனோ...

மல்லி பூவினும் மெல்லிய தீரர்
போர் வாளினும் மின்னிய வீரர்
வெண்பாலினை மிஞ்சிய தேகர்
துய்ய தேனினை வென்ற தூயர்
இறைமறையினை தந்த நீதர்
வெண்ணிலவு முகமோ சந்தன மனமோ
காக்க வைத்தல் நலமோ

கருங்கல்லால் அடியும் ஒன்றோ...
கடும் சொல்லால் காயமுன்றோ...
அவ்விடம் நான் இருந்தேனோ...
தங்களை அனைத்திருப்பேனோ...
என் உயிரையும் கொடுத்திருப்பேனோ...
கண்ணீர் பொங்கியது கண்ணில்... காயங்களோ என்னில்...
அடங்கிவிடுமோ எண்ணில்...

தேவையற்றோன் இறையோனே...
தமை புகழ்ந்தானே மறை மீதிலே…
இன்னும் என்ன எமக்கிங்கு வேண்டும்...
தம் ரவ்ழா நோக்கி அமர்ந்து...
புனிதம் கண்டே வியர்ந்து...
ஒன்று கூடி புகழ்ந்தோமே... ஓதி அழைத்தோமே...
தேடி வந்தோம் வளமே...

வெள்ளி திங்கள் ஒன்று கூடி...
நாங்கள் அழைத்தோம் தம் புகழ் பாடி...
இன்னும் என்ன யாம் செய்ய வேண்டும்...
நும் வரம் கிடைப்பது எப்போது...
தம் கரம் பிடிப்பது எப்போது...
நெஞ்சில் வளர்ந்தது கவலை... நாடி நின்றேன் அருளை...
அகற்றிவிடுவீர் இருளை...

ஏன் என்னை மறந்தது ஏனோ
தங்க பூ முகம் பார்த்திட தானோ
நபி நாதர் உங்கள் துணையை காத்திருந்த மனதை
வாட விடுவதும் ஏனோ...

ஏன் என்னை மறந்தது ஏனோ
இந்த பாவியின் காரியம் தானோ
கண்ணின்மணி ஒளிவை காத்திருந்த மனதை
வாட விடுவதும் ஏனோ...

                                                                                                                    by
                                                                                                                                Al-Hafiz Seyed Ismail MAC

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.