அருளொளி நபி தாஹா - அண்ணல் அஹ்மதர் பிறந்த விழா
ஒரு மனத்துடனே நாம் - உவந்து கொண்டாடிடுவோம்

மாநில மார்பெனத் திகழுங்த்தளம்
மா மக்கமெனும் மீதினிலே
ஆணிப் பொன் என வந்து அகிலத்தினோர் மனம்
ஆர்ந்த போர் புனிதர் விழா உவந்துக் கொண்டாடிடுவோம்

அகிலங்கள் அனைத்தையும் படைத்தவனாம்
ஆதி வல்லிறைவன் ஒருவநென்றே
பகிரங்கமாய் விண்டு உயர் நெறி வழங்கிய
பயகம்பர் பிறந்த விழா உவந்துக் கொண்டாடிடுவோம்

பிறப்பினில் உயர் வென்றும் தாழ்வு என்றும்
பிதற்றிடும் வேற்றுமை தனைக் கலைந்தே
சிறப்புடன் அனைவர்க்கும் சமத்துவம் வழங்கிய
செம்மல் நபி பிறந்த விழா உவந்துக் கொண்டாடிடுவோம்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.