திருநபி ஜனனம் கொண்டாடுவோம்
திலகர் நபிபுகழ்ப் பாடுவோம்
குருநபி ஜனனம் கொண்டாடுவோம் - கோமான் நபிபுகழ்ப் பாடுவோம்

அல்லாஹ்வினருளினால் புவியினில் - ரபிய்யுலவ்வல் பிறைபனிரெண்டிலே
திங்கட் கிழைமையாம் பஜ்ரிலே - தீன் கொடி நாட்டவே பிறந்த நம்
திருநபி ஜனனம் கொண்டாடுவோம்
திலகர் நபிபுகழ்ப் பாடுவோம்
குருநபி ஜனனம் கொண்டாடுவோம் - கோமான் நபிபுகழ்ப் பாடுவோம்

ஆதிஇறைவனின் அருளினால் - அருள் ஜோதியானப் பிரகாசமாய்
ஆமினா மாதவப் பாலராய் - அகிலத்தின் கருணையாய் பிறந்த நம்
திருநபி ஜனனம் கொண்டாடுவோம்
திலகர் நபிபுகழ்ப் பாடுவோம்
குருநபி ஜனனம் கொண்டாடுவோம் - கோமான் நபிபுகழ்ப் பாடுவோம்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.