அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா
அருள் பெரும் ஞான ஙரீபன் நவாஜ் குவாஜா

ஏழைப் பங்காளர் எல்லோர்க்கும் தோழர்
இறை நேசச் சீலர் நபி நாதர் பேரர்
தெய்வீக ஞானத் தென்றல் வீசும் அது
திசையெங்கும் உங்கள் புகழ் பேசும்
அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா

அன்பான தீனில் அழகாக வாழ
பண்பாக சேர்த்தீர் பல இலட்சம் பேரை
அஞ்ஞான இஸ்லாம் கண்டே வாழும்
அருள் கனிவாக போதம் செய்தீர் நாளும்
அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா

கையேந்தும் மாந்தர் கலைஞான வேந்தர்
படையேற்று மன்னர் பணிந்தாரே முன்னர்
கோடான கோடி மக்கள் கூடி
எங்கும் குமிகின்றார் உங்கள் தர்பார் நாடி
அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.