காஜா எந்தன் காஜா - என் உயிருக்குள் வா வா
ராஜாவின் ராஜா - அலியாரின் அன்பாலா

தேடி வருவோர்க்கெல்லாம் காஜா - ஒளிவார்க்கும் சூரியனே தேஜா
உங்கள் தர்பாரிலே காஜா - சிரம் பணிவாரே அவ்லியா
எங்கள் ஹிந்துள் வலி காஜா - குத்பே சிஷ்தியாவின் ராஜா
காஜாவே உங்கள் அன்பிலே நபி - முஸ்தபாவைப் பார்த்தோம்

காஜா எந்தன் காஜா - என் உயிருக்குள் வா வா
ராஜாவின் ராஜா - அலியாரின் அன்பாலா

என் குருவின் கொடையே - சத்குருவின் கொடையே
சத்குரு நாதரின் கொடையே - வாழ்வின் ஆதாரத் தாழம் நீயே
இருள் நீக்கும் அன்பின் பேரொளியே - நிழலாகும் கருணை கடலே
உன் பாதம் சேரும் வரை - வாழ்க்கை என்பதொரு கனவு தானே காஜா

காஜா எந்தன் காஜா - என் உயிருக்குள் வா வா
ராஜாவின் ராஜா - அலியாரின் அன்பாலா

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.