சந்திரனும் தாரகையும்
பார்த்து திகைத்து நின்றதே
அவர்களை ஆலம் அனைத்துமே
பார்த்து திகைத்து நின்றதே

ஸல்லி அலா நபியினா
ஸல்லி அலா முஹம்மதின்
ஸல்லி அலா நபியினா
ஸல்லி அலா முஹம்மதின்

வல்லுஹா சூரத்தை
பகர்ந்த ரூஹுல் அமீன்
முஸ்தஃபாவின் சூரத்தை
பார்த்து திகைத்து நின்றார்கள்

அவர்களை ஆலம் அனைத்துமே
பார்த்து திகைத்து நின்றதே

ஸல்லி அலா நபியினா
ஸல்லி அலா முஹம்மதின்
ஸல்லி அலா நபியினா
ஸல்லி அலா முஹம்மதின்

மிஃராஜ் இரவின் இமாமை
அன்பி யாக்கள் சஃபினில்
முன்னவரும் பின்னவரும்
பார்த்து திகைத்து நின்றார்கள்
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

அர்ஷை கடந்த அண்ணலின்
அழகை ரூஹுல் அமீன்
சித்ரத் முன்தஹாதனில்
பார்த்து திகைத்து நின்றார்கள்
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

யார் தான் உணர்வார்
கவ்தரின் நீர்கிடைத்ததோ
கவ்தரின் நாயகர் அழகில்
மூழ்கி திகைத்து நிற்போமே
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

நாமும் நபியின் வாசலை
பார்த்து திகைத்து நின்போமே
நூரின் நூராய் இருப்பதால்
பார்த்து திகைத்து நின்போமே
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

நன்மை தீமை மீதும்
நீதியில் கிருபை செய்தார்கள்
நல்லவரும் தீயவரும்
பார்த்து திகைத்து நின்றார்கள்
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

நாஸிரே அண்ணலின்
ஆற்றலில் மூழ்கியே
ரப்புல் வுலாவின் ஆற்றலை
பார்த்து திகைத்து நிற்பாயே!
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

ஆஷிகீன்களுக்கு
மரண வேதனை இல்லையே
பெருமானின் பேரழகை
பார்த்து திகைத்து நிற்போமே
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

மாதிஹீன்களுக்கு
மண்ணறை இருள் இல்லையே
மா நபியின் பேரொளிவை
பார்த்து திகைத்து நிற்போமே
                                                                         (அவர்களை ஆலம் அனைத்துமே)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.