உங்கள் அருள்பாதம் விடாநிலையருள்வீர்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்

உமக்கர்பணமே
உடல் உயிர் அனைத்தும்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்

அஜ்மீரில் எமை சேர்த்திடு இறைவா
பூக்களால் போர்வை போர்திடனும்

அர்பணம் செய்வேன்
என் உடல் உயிரை
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்

இறைவனின் நேசர்
நபி தந்த ஒளியாம்
ஏழை பங்காளர்
எனும் புகழுடையோர்

உங்கள் ரவ்ழா அதில்
திரு காட்சி அருள்வீர்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்

வலிமாரின் வலியே யா ஹாஜா
கொடைவள்ளலின் மகவே யா ஹாஜா
நீங்கள் நபியின் வழி
அவ்லாதே அலி
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்

நான் தொலைவினிலே
இருந்தும் கவலையில்லை
உம் கருணையோ எமக்கு மிக அருகில்

உங்கள் தரிசனமே எம்முர்ஸிதினில்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்

செய்ஹு உதுமானு வலி செய்யித் மஸ்ஊது வலி
எனும் காரண பெயரினில் அரசாட்சி

இந்த உயர் வழியில்
எம்மை இணைத்திடுவீர்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.