யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ்
யா நபியல்லாஹ் யா ஷபீயல்லாஹ்
நாயனின் தூதரின் நபிகள் நாதரின்
நன்மொழி கேளீரோ நயம்பட வாழீரோ

இறைகுர்ஆனும் நபி மொழியும்
இங்கவரீந்த இரு பொருட்கள்
திறனாய் அவற்றை பின் தொடர்ந்தால்
தீங்கே இல்லை இது நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

உடலே எரிந்து போனாலும்
உயிரே பிரிய நேர்ந்தாலும்
திடனாய் இணையே வையாமல்
திகழ்வீர் இதுவும் நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

வறியோர்க்கீயின் ஒரு நன்மை
உறவோர்க்கீயின் இரு நன்மை
நெறியை விளக்கும் அறவுறைகள்
நிகழ்த்தும் இதுவும் நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

உன்னை விடவும் பொருள் நிலையில்
உயர்ந்தோர் தம்மை கண்டுவிடின்
உன்னை விடவும் தாழ்ந்தோரை
எண்ணுக என்பதும் நபிமொழியாம்
                                                                                       (யா ரஸூலல்லாஹ்)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.