தூயர் நீங்களன்றோ... பாவி நாங்களன்றோ...
தூயர் நீங்களன்றோ... பாவி நாங்களன்றோ...

நீங்கள் ஸாஹே ஹரம்
நான் ஃபகீரே அஜம்
நீங்கள் உயர்வின் குணம்
நாங்கள் தாழ்ந்த இனம்
நீங்கள் இறையின் கொடை...
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

இல்ஹாமை உடையாய் அணிந்தவர்
குர்ஆனின் கருவாய் அமைந்தவர்
உங்கள் சிம்மாசனம் அர்ஷே அழீம்...
யா ரஹ்மத்தன் லில்ஆலமீன்...
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

நீங்கள் ஹகீகத் நான் அதை உணர துடிக்கின்றவர்
தகித்திடும் எமக்கு நன்னீரின் கடல் நீங்களே
என்னில்லம் மண்ணிலே
நும் பயணம் வின்னிலே
ஷித்ரதுல் முன்தஹா...
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

நான் நிலை குழைந்து தடுமாறி விழும் முன்னரே...
உங்கள் திருக்காட்சியே என்றும் எமைத் தேற்றுமே
எங்கள் நன்னேரமே நாங்கள் உங்கள் உம்மத்தே
நீங்கள் தருவீர் ரிழா
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூலல்லாஹ்
மாதாம முல்கில்லாஹ்

வானோரே மிஃராஜின் சுல்தான் நபியவர்களே
நீங்கள் பார்த்தாலே பரவசத்தில் உரைவீர்களே
சூரா வல்லைலு திருமுடியை விவரிக்குமே
முழு குர்ஆனும் முகஅழகின் புகழ் கூறுமே
உங்கள் முகம் காணவே
எங்கள் அண்ணலே அன்பியா அணியின் இமாம்
நாமம் கேட்டாலே நவிழ்ந்திடனும் ஸல்லி அலா
நவிழ்ந்திடனும் ஸல்லி அலா

தூயரே பாவி நான் முஸ்தஃபா முஜ்தபா காதிமுல் முர்ஸலீன்
யா ரஹ்மத்தன் லில்ஆலமீன்
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

படைப்பில் புனிதர் தங்கள் நிலை
ஹக்கின் குரல் உங்கள் உரை
வானோரே உங்கள் வாசகர்
ஜிப்ரயீல் அமீன் உங்கள் சேவகர்
யா ரஹ்மத்தன் லில்ஆலமீன்
                                                                                                                                 (தூயர் நீங்களன்றோ...)

நீங்கள் பேரொளியாம் போர்வையை அணிந்தவர்கள்...
நாங்கள் ஸலவாத்தை கோர்வையாய் மொழிபவர்கள்
இஷ்கின் கஃபா நீங்கள் சுற்றி வருவோர் நாங்கள் (x4)
தேட்டம் தீர்ப்போர்களே...

தூயர் நீங்களன்றோ... பாவி நாங்களன்றோ...
தூயர் நீங்களன்றோ... எம் பாவம் தீர்ப்பீரன்றோ...

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.