தங்கள் தயவால் தாஹாவே
தரணி தனினோர் தீனை கண்டோம்
குஃபிரை களைந்தே கலிமா சொன்னோம்
லாயிலாஹ இல்லல்லாஹ்

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாபிஃ கல்பி கைருல்லாஹ்
நூரே முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹ இல்லலாஹ்

கையில் கல்லை மறைத்தவனாய்
அண்ணலிடம் அபு ஜஹ்ல் வந்தான்
உண்மை நபியாக நீர் இருந்தால்
கையுல் மறைந்ததை பகரும் என்றான்

இறைவனின் மேன்மை இறங்கியதே
உத்தம நபியின் உத்தரவால்
கையில் கற்கள் உரைத்ததுவே
லாயிலாஹ இல்லலாஹ்
                                                                                   (ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்)

தங்கையிடத்தில் உமர் விளைந்தார்
இத்தளம் நானேகி வரும் முன்னர்
என்னே இங்கே செய்து வந்தாய்
மறைந்து மறைத்து எதை படித்தாய்

தங்கை குர்ஆனை எடுத்தோத
இறைவனின் வசனம் கேட்டதுமே
உத்தம உமருள்ளம் உரைத்ததுவே
லாயிலாஹ இல்லலாஹ்
                                                                                   (ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்)

பிலால் எனும் ஹபஷி எம் தலைவர்
ஹபீபின் பிரியத்தை பெற்றவர்கள்
அகிலத்தில் ஆஷிக் அனைவருக்கும்
நட்சத்திரமாய் மிளிர்பவர்கள்

அநீதங்கள் அடுக்காய் அவருடம்பில்
சுடுகற்களை சுமையாய் வைத்திடினும்
நாவது ஓங்கி ஒலித்ததுவே
லாயிலாஹ இல்லலாஹ்
                                                                                   (ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்)

துன்யாவின் மனு வர்க்கத்திலே
ஷிர்கும் பித்அத்தும் மழித்த நேரம்
ரப்பின் அடிமை என்றாலும்
புத்தை வணங்கி வந்தனரே

புத்தின் அறைகள் அதிர்ந்ததுவே
கண்மணி வரவால் கவிழ்ந்ததுவே
படைப்புகள் புகழ்ந்திதை உரைத்ததுவே
இணையற்ற இறைவன் ஒருவனென்றே

லாயிலாஹ இல்லலாஹ்
லாயிலாஹ இல்லலாஹ்
லாயிலாஹ இல்லலாஹ்
முஹம்மதுர் ரஸூலல்லாஹ்
                                                                                   (ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.