அகத்தினில் ஒளியேற்ற - இந்த
இகத்தினில் வெளியானீர்
ஜெகமெங்கும் ஜொலித்தோங்க
ஜெகஜோதியாய் பிறந்தீர்
(அகத்தினில்)
சற்குண நபியின் ஷரீஅத்தினில் ஷாஃபி இமாமவர் மத்ஹபினில் நற்குணம் நிறைந்த ஹன்பலி மத்ஹபில் நடுநிலை பேணீனீர் கௌதே எம் சமதானி(அகத்தினில்)
பனிவாய் மீண்டு பன்னிரெண்டு ரக்அத் ஃபாத்திஹா இக்லாஸ் உடன் ஓதி யாகௌதுல் அஃலமே அப்துல் காதிரே யா முஹ்ய்யித்தின் என்பீர் கௌதே எம் சமதானி(அகத்தினில்)
எக்குறை இல்லா நும் பெயரை எத்துணை இல்லாமல் மன ஓர்மையாய் ஆயிரம் முறைகள் கூறி அழைத்தால் அவசரமாய் வருவீர் கௌதே எம் சமதானி(அகத்தினில்)
நிதமும் நீடித்த நும் தர்பாரை நித்தமும் நாடுவோர்க்கு எம் கரமே நிரந்தரம் உண்டென உரைத்தவரே மா பாவியினை ஏற்பீரே கௌதே எம் சமதானி(அகத்தினில்)
எம்மவர் உள்ளத்தில் இருள் அகற்ற எங்களின் இல்லத்தில் தினம் வருவீர் சஞ்சலம் தீர்க்கும் சத்திய பாதையில் தஞ்சமே தந்திடுவீர் கௌதே எம் சமதானி(அகத்தினில்)