நேசம் யாவும் உங்கள் மீது யா முஹ்ய்யித்தீன் - Nesam Yaavum Ungal Meedhu Yaa Muhieddeen
நேசம் யாவும் உங்கள் மீது யா முஹ்ய்யித்தீன்
பாசம் பொழிய வேண்டுகின்றோம் யா முஹ்ய்யித்தீன்
மாசில்லாத தீனின் ஜோதியாய் தோன்றி
மண்ணகத்தில் தீனைக் காத்த யாமுஹ்ய்யித்தீன்
(நேசம் யாவும்)
பகுதாத் நகர்க்கொரு நாள் நான் வருவேன் பொன்னான மலரடி கண்ணால் தொடுவேன் மெஞ்ஞான அருட் கடலில் நான் விழுவேன் மெய்நிலை மறந்து நின்று நான் அழுவேன் எங்கள் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே பிந்திடாது கருணை அருள் பொழிய வேண்டுமே(நேசம் யாவும்)
மன்னர் மஹ்மூது மாநபியின் - Mannar Mahmoodhu Maanabiyin
மன்னர் மஹ்மூது மாநபியின்
மரபினில் மலர்ந்த மஹராஜரே
முன்னோனின் தவ சீலரே
மன்றாடியே கரை சேர்ப்பீரே
ஜீலான் நகர் தனில் ஜெனித்தவரே
ஜீவிய வாழ்க்கையில் ஜொலிப்பவரே
மலர்ந்திடும் மழலையாய் அபூஸாலிஹ்
மங்கை பாத்திமா அரும் மைந்தரே
தனியோனின் தத்துவ தவசீலரே
தாஹா நபியின் திருப்பேரரே
எம்மான் ஏந்தலர் எடுத்தோதிய
எழில் மிகு வழியை ஏற்றினோரே
பக்தாத் பதி மீது வாழும் அன்பரே - Bagdad Pathi Meedhu Vaazhum Anbare
பக்தாத் பதி மீது வாழும் அன்பரே
பண்புயர் முஹ்ய்யித்தீன் அப்துல் காதிரே
அல்லாஹுவின் அருட்கொடையால் அவதரித்தீர்
அண்ணல் எங்கள் ஆருயிரின் திருப்பேரராய்
கௌதுல் அஃலம் ரலியல்லாஹ் - 2
பக்தாத்... பக்தாத்... பக்தாத் பதி மீது
குத்புக் கெல்லாம் தலைவராய் திகழ்ந்தவரே
குவளயத்தில் தீன் தழைக்கக் செய்தவரே
பன்னிரெண்டு ஆண்டு தவம் புரிந்தீர்
பண்பாளன் பாசத்தைப் பெற்று கொண்டீர்
குத்பே எங்கள் சமதானி
கௌதே எங்கள் நூராணி - 2
பக்தாத்... பக்தாத்... பக்தாத் பதி மீது
கண்டேனே மையல் கொண்டேனே - Kandene Maiyal Kondene
பல்லவி
கண்டேனே மையல் கொண்டேனே - எந்தன் கனவினில் கண்குளிரவேஅ. பல்லவி
தண்டேனொழுகிய தாமரைப்போல்லெழுந்து தாதவிள் செழுமலர் பாதமெனதுமுக மீதில் முகக்க அப்துல்காதிர் முஹியித்தீனேசரணங்கள்
தந்த ரத்ன சிவிகை மீதினிலேறி தமியனுக்காக வெகு தயவுகள்கூறி சொந்த அடிமையென வந்துள்ளந்தேறி தொலையாத மையல்கொண்டுள்ளன்புமீறி தொழு பொழுதினில்வெகு தளதளவெனஒளிர் தொழுகியபதமெனில் அழகுதரயிரவில்பக்தாதில் வாழும் பரிவான ராஜர் - Bagdadil Vaazhum Parivaana Raajar
பக்தாதில் வாழும்
பரிவான ராஜர்
மதீனாவில் ஆளும் நபி
மஹ்மூது பேரர்
பதி நான் வரும் நாளும்
அறியேனே நானும்
அழைத்திடுங்கள் குரு நாதரே
என்றே கரைகின்றேன்
என்னாளுமே...
ஆற்றின் கரை வந்த
கனியை சுவைத்த
அபூ ஸாலிஹ் சீலர்
கலங்கி... கசிந்தார்
இறையச்சம் தனை மெச்சி
இல் வாழ்வை ஏற்ற
ஃபாத்திமா புத்திரர் உம்
ரவ்ழா...
தரிசிக்க அழைப்பீர்களே...