அனுக்கிரேகம் தரவர
மனக்குறை ஏதையா
தங்கள் மனக்குறை ஏதையா
என்னைக் காரும் அருள் தாரும்
இகத்தில் யா அப்துல் காதிரே
வஞ்சி ஆசையால் மனது
வாடி மெலியாமலே
அஞ்சலென் சென்றென்னை
ஆளும் அப்துல் காதிர் சாஹிபே
தக்க கலிமா மீறவும்
தங்கள் புகழ் கூறவும்
சக்ராத்தில் நீர் உதவி தாரும்
எங்கள் யா அப்துல் காதிரே
துச்சனன் இபுலீசு என்னை
துயர்ந்து வந்தடறாமலே
இச்சனம் கண்பார்த்தருளும்
ஏந்தல் யா அப்துல் காதிரே
சதுமறை செறி மா பஃதா
தபூசாலிஹு சேயராய்
அதிபதி என்னும் கௌதுல்
அஃழம் அப்துல் காதிரே