பக்தாத் பதி மீது வாழும் அன்பரே பண்புயர் முஹ்ய்யித்தீன் அப்துல் காதிரே அல்லாஹுவின் அருட்கொடையால் அவதரித்தீர் அண்ணல் எங்கள் ஆருயிரின் திருப்பேரராய் கௌதுல் அஃலம் ரலியல்லாஹ் - 2 பக்தாத்... பக்தாத்... பக்தாத் பதி மீது குத்புக் கெல்லாம் தலைவராய் திகழ்ந்தவரே குவளயத்தில் தீன் தழைக்கக் செய்தவரே பன்னிரெண்டு ஆண்டு தவம் புரிந்தீர் பண்பாளன் பாசத்தைப் பெற்று கொண்டீர் குத்பே எங்கள் சமதானி கௌதே எங்கள் நூராணி - 2 பக்தாத்... பக்தாத்... பக்தாத் பதி மீது மார்க்கத்திற்கு உயிர் கொடுத்த தியாகச் செம்மலே மடமையை அகற்றி வைத்த இதய தீபமே பாட்டனார் ஷரிஅத்தை பாது காக்கவே பாரினில் ஷைஹாக அவதரித்தீர் அன்பே எங்கள் மஹ்பூபே பண்பே எங்கள் மஃஷூக்கே - 2 பக்தாத்... பக்தாத்... பக்தாத் பதி மீது

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.