பக்தாதில் வாழும்
பரிவான ராஜர்
மதீனாவில் ஆளும் நபி
மஹ்மூது பேரர்
பதி நான் வரும் நாளும்
அறியேனே நானும்
அழைத்திடுங்கள் குரு நாதரே
என்றே கரைகின்றேன்
என்னாளுமே...
ஆற்றின் கரை வந்த
கனியை சுவைத்த
அபூ ஸாலிஹ் சீலர்
கலங்கி... கசிந்தார்
இறையச்சம் தனை மெச்சி
இல் வாழ்வை ஏற்ற
ஃபாத்திமா புத்திரர் உம்
ரவ்ழா...
தரிசிக்க அழைப்பீர்களே...
பிரசங்கம் செய்திடவே
பெருமானும் கூற
தயக்கம் நிறைந்தே
பணிவாகி நின்றீர்
எம்மானும் எழு முறை
நும் நாவில் உமிழ
பிரகாச வடிவாகிய
வதனம்...
கண்டுய்ய அழைப்பீர்களே...
இறையண்மை சேர்க்கும்
ஆன்மீகப் பாதையின்
வெகு தூரப் பயணத்தை
எளிதாக்கி தந்தீர்
நேசர்கள் புஜம் கண்ட
பதம் தன்னில் நானும்
முத்தங்கள் தந்திடவே
அன்பே...
அருகில் அழைப்பீர்களே...
அலிய்யுல் ஹீத்தி எனும்
அருளான சீடர்
அவையில் துயில் கொள்ள
முன் சென்று நின்றீர்
கனவில் அவர் திரு நபியை
தரிசிக்கும் காட்சி
நினைவில் கண்டு களித்த
விழிகளை...
பருக அழைப்பீர்களே...
உண்மை நிலை நாட்ட
உயிரைத் துறந்தே
தியாகத்தின் வித்திட்ட
திருவான செம்மல்
ஹுஸைனாரின் உதிரம்
உணர்வோடு தாங்கும்
கர்பலா மண்ணெடுத்தே
கண்களில்...
கலந்திட அழைப்பீர்களே...
புனிதப் பதி ஏகும்
இனிதான பேரே
ஃபீ அமானில்லாஹி
வ ரஸூலிஹ்
அதபாய் எம் முகமன்
உயர் தர்பாரில் சேர்த்தே
அருகழைக்கச் சொல்லிடுவீர்
காதலர்...
மன்றில் முறையிடுவீர்ே