பக்தாதில் வீசும் காற்று என் பக்கம் வந்தது மனம் மயங்கி போனது காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2) என் கண்களை அனைத்தேனே கண்ணீராய் கவிதைகள் அமைத்தேனே இரு கரங்களை விரித்தேனே யா மதத் குத்துபென்று அழைத்தேனே (×2) ரழியல்லாஹு அன் அப்துல் காதிர்... யா காதிர்... ரழியல்லாஹு அன் கவ்துல் அஃழம்... யா முஹ்யித்தீன் (×2) பக்தாதில் வீசும் காற்று என் பக்கம் வந்தது மனம் மயங்கி போனது காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2) என் நிலையை மறந்தாலும் விதி வழி வலிகளும் அமைத்தாளும் என் வலிகளால் வழி தோன்றும் தூயவரின் ஒளியால் துயர் தீரும் (×2) பக்தாதில் வீசும் காற்று என் பக்கம் வந்தது மனம் மயங்கி போனது காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2) உங்கள் புகழை பாடிடுவோர் பாருலகில் நிதமும் ஒரு கோடி அதில் ஒருவனாய் நான் வாழ்வேன் ஓயாத கவிபுகழ் கோர்த்திடுவேன்(×2) ஏழை எந்தன் கவிதைகள் புகழ்பாடும் என்று நினைத்தேன் மாறாக என் கவிதை உங்களினால்... புகழ் அடைந்ததே (×2) பக்தாதில் வாழும் சுல்தான் என் அப்துல் காதிரே என் உயிரின் ஜோதியே காற்றே செல்... எந்தன் ஏக்கம் சொல் (×2)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.