பகுதாதின் வாசா பதியோர்கள் நேசா
காதிர் முஹிய்யித்தீனே குரு நாதா

அண்ணல் ரஸுலின் மரபினில் வந்த
(பைங்கிளி ஃபாத்திமா தவபாலரே) (x2)
மண்மீதில் ஏழை மனவாட்டம் தீர்க்கும்
மன்னர் முஹ்யித்தீனே குரு நாதா!
                                                                                                                       (பகுதாதின் வாசா ...)

இஸ்லாத்தின் பண்பை உலகினில் பரப்ப
(அவதரித்தீரே ஜீலானிலே) (x2)
பண்போடு தவத்தோர் அன்போடு போற்றிக்
கொண்டாடும் முஹ்யித்தீனே குரு நாதா
                                                                                                                       (பகுதாதின் வாசா ...)

ரப்போடு நபியும் ரகசியம் பேச
உகப்புடன் கேட்ட உல்லாசரே
ஹக்கான உம்மை நான் எக்காலம் காண்பேன்
முத்தே முஹ்யித்தீனே குரு நாதா
                                                                                                                       (பகுதாதின் வாசா ...)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.