எமக்குதவிடுவீர் எமக்குதவிடுவீர் உங்கள் அன்பர்கள் துயர் தீர்த்திடுவீர் எங்கள் தீனும் துன்யா சீரமைப்பீர் (×2) யா கெளதுல் அஃழம் தஸ்தகீர்.... துயர் சூழ்ந்தோர் துயரை நீக்கிடும் யா கௌதுல் அஃலம் ஃபகீர்களின் ஹாஜத்தை ஏற்றிடும் யாகௌதுல் அஃலம் உங்கள் கரத்தில் எங்களின் கரங்களைக் கொடுத்தோம் உங்கள் கரம்தான் எங்களுக்கடைக்கலம் யா கௌதுல் அஃலம் வல்லாஹி அந்த கஷ்டங்கள் கஷ்டமாயில்லை அந்நேரத்தில் அழைத்தோமே யா கௌதுல் அஃலம் துன்பம் அனைத்திற்கும் துன்பம் விழைத்திடுவீர் என் இதயமோ! துன்பத்தில் இருக்குது யா கௌதுல் அஃலம் யாரிடம் சென்று என் நிலையை உரைப்பேன் தங்களைத் தவிர கேட்பாரில்லை யா கௌதுல் அஃலம் என்மேல் உங்கள் அருள் தாரும் யா கௌதுல் அஃலம் என் துன்பங்கள் துயரை நீக்கிடும் யா கௌதுல் அஃலம் என் கண்கள் என் இதயம் என் கல்பும் என் தலையும் எங்காவது உம் பாதத்தைப் பதியும் யாகௌதுல் அஃலம் துயர் சூழ்ந்த நிலையில் எந்நேரமும் உள்ளேன் அல்லாஹுக்காக அருள் புரிவீர் யா கௌதுல் அஃலம்..

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.