ஜீலானி தேசம் தன்னில்
ஜீனத்துள்ள மாதம் தன்னில்
ஜனித்தார்கள் குரு நாதர் முஹ்யித்தீன் ஆண்டகையே!
ஆறு பத்து ஆண்டாக மகவின்றி மனமுடைந்து
ஏற்றமுள்ள நாயனிடம் ஏந்தி துஆ வேண்டி நின்றார்
அன்னை ஃபாத்திமா வயிற்றில் அமுதான ஜோதி தனை
அன்பாய் வடிவமைத்து வானுலகம் மலக்கு சென்றார்
மூன்றாம் பிறை தனிலியே களவாட வந்தவனை
முண்டி மணி வயிற்றில் வெளிவந்து வெட்டினரே
இருரண்டு ஷஹ்ர் தனிலே பாலதனை காய்ச்சுகையில்
இரண்டாக பிளந்ததுவே
பால் களையம் உடைந்ததுவே
களையமதை அடுப்பில் வைத்து
தீ மூட்ட சொன்னார்கள்
பாலும் களையமுமாய் நிரம்பி வழிந்து செழித்ததுவே
சரியாக மாதம் பத்தில்
ஷஹ்ருடைய நேரமதில்
ஷரீஅத்தை நிலை நாட்ட
அப்துல் காதிர் பிறந்தனரே
பிறந்தவுடன் தாயாரும்
ஹுருல் ஈன்கள் பெண்டுகளும்
பிந்தாமல் தாலாட்டி
சோபனங்கள் கூறினரே
தீயவனாம் இபுலீஸும் தீங்கிழைக்கும் ஜின் கூட்டம்
ஷெய்கு அப்துல்லா பிறப்பை
தாங்காமல் ஓடினதே
தீன் தீன் முஹம்மதரின்
தீன் துலங்க வந்தவரே
தீனுக்கு உயிர் கொடுத்த முஹ்யித்தீன் ஆண்டகையே
சொல்லுகின்ற ஸலவாத்தும்
சொல்லினிக்க சலாமதுவும்
சுந்தர நபி மீதும்
துயர்ந்தோர் மீதும்
இலங்கிடுமே