ஜீலானீ அப்துல்காதிர் ஜீலானி
ஜீலானீ ஒப்பில்லாத தவஞானி
வலிமார்கள் தோள்களிலே
உவப்புடனே அமர்ந்த பாதம்
உலகமெங்கும் தீன் முழங்க
ஓசையிட்டே நடந்த பாதம்
அழியாத திருமறையின்
வழி நடக்க உழைத்த பாதம்
எழிலாய் அதை காலமெல்லாம்
என் சிரசில் தாங்க வேண்டும்
நிகரில்லா தவ வலிமை
நீக்கமற நீர் அறிந்தீர்
அகக்கண்ணை திறந்துலகை
பார்க்க வழி நீர் தெரிந்தீர்
வகுத்த நல் இறைவழியில்
வனப்புடன் நீர் நடந்தீர்
பகுதாது பதி அமர்ந்து
பாருலகை மணக்க வைத்தீர்
இமைக்கும் முன் அருள் கிடைக்கும்
இடர் வந்து உம்மை அழைத்தால்
அமைதிக்கு வழி பிறக்கும்
அன்புடனே நீர் அணைத்தால்
தமை அறிந்த தவ சீலா
தவசிகளின் உயர் ராஜா
உமைபோற்றி புகழ்திடவே
பாடல் இங்கு போதாதே
மூடிகிடந்த கப்ருகுள்ளே
மையித்தான பாடகனை
பாடிக் கொண்டு எழுந்துவர
பணித்தனர் பீரானே
ஆடிடுமே அகிலமெல்லாம்
ஆணையிட்டால் சுப்ஹானி.
நாடியது நடந்திடுமே
நாவசைத்தால் ரஹ்மானி...