பல்லவி
கண்டேனே மையல் கொண்டேனே - எந்தன் கனவினில் கண்குளிரவேஅ. பல்லவி
தண்டேனொழுகிய தாமரைப்போல்லெழுந்து தாதவிள் செழுமலர் பாதமெனதுமுக மீதில் முகக்க அப்துல்காதிர் முஹியித்தீனேசரணங்கள்
தந்த ரத்ன சிவிகை மீதினிலேறி தமியனுக்காக வெகு தயவுகள்கூறி சொந்த அடிமையென வந்துள்ளந்தேறி தொலையாத மையல்கொண்டுள்ளன்புமீறி தொழு பொழுதினில்வெகு தளதளவெனஒளிர் தொழுகியபதமெனில் அழகுதரயிரவில் பேரிட்டபிள்ளையை நான் பாதத்தில்போட பிரியம்வைத்தேந்திருக்கை தொட்டுவிளையாட ஏரிட்டசந்த்ரமையல் சிந்துகள்பாட இனிநாளைக்காகட்டெந் திருவுரையாட இருபற வருமவ ரடிமைத்தனையு மிக வருடைதனிலே மிக மனமுற வாழ்க ஹழ்ரத்திலே கனியாய் நபிகண்டநாதர் கள்ளந்தனக்குவெகு கவிநல்கும் போதர் கிழுறுநபி கையினால் உணவுண்ட நீதர் கேட்போர்க்கெல்லாங்கிருபை கொடுக்கும்பொற்பாதர் கேதமில்லாத சகோதர சீர்பகுதாதுக் கரசர் அப்துல்காதிர் முஹியித்தீனே