மன்னர் மஹ்மூது மாநபியின்
மரபினில் மலர்ந்த மஹராஜரே
முன்னோனின் தவ சீலரே
மன்றாடியே கரை சேர்ப்பீரே
ஜீலான் நகர் தனில் ஜெனித்தவரே
ஜீவிய வாழ்க்கையில் ஜொலிப்பவரே
மலர்ந்திடும் மழலையாய் அபூஸாலிஹ்
மங்கை பாத்திமா அரும் மைந்தரே
தனியோனின் தத்துவ தவசீலரே
தாஹா நபியின் திருப்பேரரே
எம்மான் ஏந்தலர் எடுத்தோதிய
எழில் மிகு வழியை ஏற்றினோரே
கோமானாம் வலிகளின் வல்லவரே
கௌதுல் அஃலமே குரு நாதரே
நானிலம் புகழ்ந்திடும் நன்நாதரே
நறுமணம் கமழ்ந்திடும் நாயகரே
எங்களின் வாழ்க்கையில் எப்பிணிகள்
எங்களை அணுகாமல் கைபிடிப்பீர்
எங்களுக்கீடேற்றம் தந்தருள்வீர்
எங்களை என்றென்றும் காத்தருள்வீர்