மன்னி மன்னி உங்களிடம் மன்றாடி கேட்கிறோம்
மன்னவரே எங்கள் துயர் மாற்றும் முஹ்யித்தீனே
(மன்னி மன்னி)
எந்நாளும் உங்கள் திரு முன்னோர் வழிகளிலே இந்நாளும் பிந்நாளும் இன்பம் முஹ்யித்தீனே விண்ணாளும் நாயகனின் பொன்னான நன் நபியின் கண்ணான பேரரே கை தாங்கும் முஹ்யித்தீனே(மன்னி மன்னி)
எண்ணும் எங்கள் எண்ணமெல்லாம் எந்நாளும் வெற்றி பெற என்னரசே வந்தருள்வீர் ஏந்தல் முஹ்யித்தீனே தூண்டில் விழும் புழுவினைப் போல் துடியாய் துடிக்கும் எங்கள் வேண்டுதல் பலன் பெறவே வருவீர் முஹிய்யித்தீனே(மன்னி மன்னி)
ஆண்டுதோறும் உங்களையே அடியாரும் அழைக்கின்றோம் மீண்டும் மீண்டும் வருத்தங்களை தீர்ப்பீர் முஹிய்யித்தீனே வேண்டும் எங்கள் வேண்டுதலை மன்னானிடம் வேண்டி எந்நாளும் பெற்று தரும் மன்னர் முஹிய்யித்தீனே(மன்னி மன்னி)