மழைமுகிழ்களை பாலைவெளியினில் யார் கூட்டினார்
முகில் குடை மீள நிலழை நீக்கினார்
முழுநிலவினை இருள் இரவினில் யார் காட்டினார்
விரல் அசைவில் பிளந்து மீட்டினார்
ஒட்டகம் சுமந்து சென்றதே
ஒப்பில்லா படைப்பு ஒன்றினை
இருமுறை பிளந் திதயத்தில்
இறைமறை ததும்பி வந்ததே
இச் சின்ன உள்ளதில் பேரின்ப காதல் ஏற்றி வைத்ததார்
மான் மரங்கள் கற்கள்
கூட வந்து பேசுமே
நான்மறை புகழுந்துரைத்ததார்
விரல் இடையில் சுத்த நீரோடி வந்ததே
தாகம் தீர்த்த தயாலரார்
ஸல்லா அலைக்க யா ஷபியல் முத்னீபீன்
வஸல்லம் அலைக்க யா ரஸூலல்லாஹ்
ஸல்லா அலைக்க யா ஷபியல் முத்னீபீன்
வஸல்லம் அலைக்க யா ஹபீபல்லாஹ்
வாளால் கொல்ல வந்தோர்
வாழ்வை கண்டு கொண்டோர்
வீழாத வரலாற்றிலே
பகையார் சினங்கள் யாவும் பண்பால் மாறிவிடும்
பாசர் வழி முறையிலே
எல்லா படைப்புகளும் உங்கள் மீது காதலுறும்
உயிரே இல்லாத உஹதுமலை
உகக்கின்றதே
உங்கள் மீது காதல் கொண்டு
பாடும் நாங்கள் நேரில் காணனும்
மான் மரங்கள் கற்கள்
கூட வந்து பேசுமே
நான்மறை புகழுந்துரைத்ததார்
விரல் இடையில் சுத்த நீரோடி வந்ததே
தாகம் தீர்த்த தயாலரார்
ஸல்லா அலைக்க யா ஷபியல் முத்னீபீன்
வஸல்லம் அலைக்க யா ரஸூலல்லாஹ்
ஸல்லா அலைக்க யா ஷபியல் முத்னீபீன்
வஸல்லம் அலைக்க யா ஹபீபல்லாஹ்
ஈச்சை மர குடிலில்
தோழர் சூழ்ந்த சூழல்
மனதில் என்னை வெல்லுதே
ஹஸனார் கண்ட பாசர்
ஹுஸைனார் கண்ட நேசர்
நாங்கள் காண வேண்டுமே
கதீஜா நாயகியின் நாயகரின் பேரழகை
நாயனே புகழ்ந்துரைக்கும் நாயகத்தின் குண அழகை
நாளும் நாங்கள் காண்பதற்கு
பல கோடி பார்வை வேண்டுமே
மான் மரங்கள் கற்கள்
கூட வந்து பேசுமே
நான்மறை புகழுந்துரைத்ததார்
விரல் இடையில் சுத்த நீரோடி வந்ததே
தாகம் தீர்த்த தயாலரார்
ஸல்லா அலைக்க யா ஷபியல் முத்னீபீன்
வஸல்லம் அலைக்க யா ரஸூலல்லாஹ்
ஸல்லா அலைக்க யா ஷபியல் முத்னீபீன்
வஸல்லம் அலைக்க யா ஹபீபல்லாஹ்