அண்ணலவர்... அழகிய நெறியினில் ஏகியே
நன்மையினை... அடைவோமே நாம் இருலோகிலே(2)

நாளே நல்ல நாளே சுப நாளே
நிமலோன்... திருத்தூதர் வந்த நாளே
நெஞ்சம் நிறைவா னன்பினாலே நபிகோண்... அவர் மாண்பை ஓதுவோமே(2)

மலர் பாலை சூழ்ந்த நன் மாமக்க மீது
மங்கை ஆமினாவின் கண்மணியாக வந்தே
மகியெங்குமார்ந்த குஃபிர் மாயை நீங்க
மணியான மார்க்கம் எனும் தீபம் தந்தார்
                                                                                                                       (அண்ணலவர்)

இடர் வந்த போதும் உரை காத்து நின்றே
இஸ்லாத்தின் கொள்கை முழக்கம் புரிந்தார்
மடமைகள் மாழ மதிபோதம் தந்து
மருலோகின் மேன்மை மனுவோர்க்குவிந்தார்
                                                                                                                       (அண்ணலவர்)

அகம் தெள்ளிதாக அடர் பாவம்போக
அவர் தந்த வேதம் அருமருந்தாகும்
முஹம்மத் முஹம்மத் எனும் முத்து நாமம்
முழுலோகமெங்கும் ஒலிக்கும் சுகநாதம்
                                                                                                                       (அண்ணலவர்)

மஜ்லிஸுன்நிஸ்வானின் மங்கையர்கள் கூடி
மஹ்மூதர் எம்மான் ஹுஸைன் கீதம் பாடி
மஹ்ஷரில் அன்னாரின் நல்மன்றாட்டம் நாடி
மனங்குளிர்வாக ஸலவாத்தை ஓதி
                                                                                                                       (அண்ணலவர்)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.