நபி மணி தந்த அலி வழி வந்த இரண்டு தீபமே இரண்டு தீபமே ஒன்று பகுதாதிலே ஒன்று நாகூரிலே 1. இறந்து போன உடலை கூட எழுப்பி காட்டும் கௌதுல் அஃலம் இழந்து போன கண்ணில் தீபம் ஏற்றிக் காட்டும் காதிர் வலி (2) இறைவன் செய்தான்..... - இறைவன் செய்தான் விண்ணோர்கள் இருவர் மூலமே அங்கு விதி மாறுமே – இங்கு வினை தீருமே

(நபி மணி)

2. கடலைக் கூட பார்வையாலே கலக்கி காட்டும் கௌதுல் அஃலம் கடலைப் போல கவலை தீர்த்து கருணை காட்டும் காதிர் வலி (2) இறைவன் செய்தான்..... - இறைவன் செய்தான் விண்ணோர்கள் இருவர் மூலமே அங்கு பதிவாகுமே – இங்கு பலனாகுமே

(நபி மணி)

3. எதனை எண்ணி கேட்ட போதும் ஏற்றுக் கொள்ளும் கௌதுல் அஃலம் கதி கலங்கி வேண்டுவோர்க்கு காவல் செய்யும் காதிர் வலி (2) இறைவன் செய்தான்..... - இறைவன் செய்தான் விண்ணோர்கள் இருவர் மூலமே அங்கு ஒளியாகுமே – இங்கு வெளியாகுமே

(நபி மணி)

4. உதிப்பைக்கூட கனவில் கண்டு உதவி செய்யும் கௌதுல் அஃலம் மதியைக்கூட மயங்கச்செய்து மகிமை காட்டும் காதிர் வலி (2) இறைவன் செய்தான்..... - இறைவன் செய்தான் விண்ணோர்கள் இருவர் மூலமே இது புதிதானது – எவருக்கும் புரியாதது நபி மணி தந்த அலி வழி வந்த இரண்டு தீபமே இரண்டு தீபமே ஒன்று பகுதாதிலே ஒன்று நாகூரிலே அங்கு விதி மாறுமே – இங்கு வினை தீருமே அங்கு பதிவாகுமே – இங்கு பலனாகுமே அங்கு ஒளியாகுமே – இங்கு வெளியாகுமே இது புதிதானது – எவருக்கும் புரியாதது...

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.