நபியோரை கண்டதில்லை
மதுரச்சொல் கேட்டதில்லை
முன்னிலே அமரவில்லை
திங்களை கனவில் நான் கண்டதில்லை...
என்னுள்ளே ஏக்கங்கள் குறையவில்லை

திங்கள் ஹபீபே என்ன செய்வேன் நான்
ரவ்ழாவை காண என்று வருவேன் நான்...

பாடி திரியும் நாமெல்லாம்
தூதர் அருகில் செல்வோமா?
பணிவாய் நம் ஆசைகளை
கண்மணி முன்னே சேர்ப்போமா?
அதிகமதிகம் நேசித்தேன் நான் என்தன் ஹபீபே
அதனால் என் மனதில் தீயால் நிறையும் நஸீபே
கல்பின் நோவை அகற்றிடுவீர்
அருகில் அழைத்து அணைத்திடுவீர்...

எனது மனதின் எண்ணங்களை
கவியாய் இதோ பாடுகின்றேன்
என்தன் மோகம் நாட்கள் செல்ல
ஏறிகொண்டே செல்கின்றதே...
இனியும் என்னை அழைக்காதேனோ என்தன் ஹபீபே
இருளில் உழலும் ஆஷிக் என்னை பாரும் ஹபீபே...

நபியோரை கண்டிடனும் மதுரச்சொல் கேட்டிடனும்
முன்னிலே அமர்ந்திடனும் திங்களை கனவில் நான் கண்டிடனும்
என்றென்றும் நினைவிலும் கண்டிடனும்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.