நல் தருணம் தனம் கோடி வரும்
சுகம் தேடி வரும் - துயர் ஓடி விடும்
முஹ்யித்தீன் புகழ் தனை பாடிடுவோம்
இறை ஞானம் வரும் பெரு வாழ்வு வரும்
நிறைவாய் உயர்வாய் நில மீதினில் விளங்கிட
1) மந்திர தந்திர நிந்தனை
யாவையும் வென்று விட
துயர் நின்று விட
மதீனா நபி மார்க்கத்தில் சென்று விட
முந்தைய பாவம் பறந்து விட
முகம் சந்திரனை போலிளங்கி விட
அல்ஹம்துலில்லாஹி ஹம்தெனுனும்
நல்லுயர் பாடலின் நாயகராம்
முஹ்யித்தீன் ஆண்டகையின்
புகழ் பாடிடுவோம் .
மனம் நிம்மதி அடைந்திட
2) பொன் பொருளும் உயர்
ஆபரணம் உலகில் எதற்கு
மனமே எதற்கு
குரு நாதரின் பாத துணை இருக்க
கொற்றவனின் மறையும் இருக்க
இறை நேசரும் ஈன்ற நெறி இருக்க
அற்புதமாய் அருள் சித்தி பெற
நற் கதியும் பல நாம் அடைய
முஹ்யித்தீன் ஆண்டகையின்
புகழ் பாடிடுவோம்
மனம் நிம்மதி அடைந்திட
3) சுத்த மறை குர்ஆன்
புகழ் பாடிடும் அண்ணல் நபி
எங்கள் மன்னர் நபி
பெரும் கத்தனின் தூதில் சிறந்த நபி
சத்தியம் காத்திடும் செம்மல் நபி
முறை பத்தியம் வைத்திடும் பண்பு நபி
ரத்தினமாய் வந்த பேரழகர்
ரகசிய இர்பான் ஞானக் கடல்
முஹ்யித்தீன் ஆண்டகையின்
புகழ் பாடிடுவோம்
மனம் நிம்மதி அடைந்திட