நேசம் யாவும் உங்கள் மீது யா முஹ்ய்யித்தீன்
பாசம் பொழிய வேண்டுகின்றோம் யா முஹ்ய்யித்தீன்
மாசில்லாத தீனின் ஜோதியாய் தோன்றி
மண்ணகத்தில் தீனைக் காத்த யாமுஹ்ய்யித்தீன்
(நேசம் யாவும்)
பகுதாத் நகர்க்கொரு நாள் நான் வருவேன் பொன்னான மலரடி கண்ணால் தொடுவேன் மெஞ்ஞான அருட் கடலில் நான் விழுவேன் மெய்நிலை மறந்து நின்று நான் அழுவேன் எங்கள் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே பிந்திடாது கருணை அருள் பொழிய வேண்டுமே(நேசம் யாவும்)
உலகில் தோன்றிய இறைத்தூதருக்கெல்லாம் உத்தம நபியே நீங்கள் இறை நூராவீர் அல்லாஹ்வின் அருள்நிறை இறை நேசருக்கெல்லாம் அப்துல் காதிர் நீங்கள் நபி நூராவீர் உங்கள் மீது நாங்கள் கொண்ட நேசம் யாவுமே எங்கள் மீது நபியருளாய் வந்து சேருமே(நேசம் யாவும்)
பார்க்கும் வரையில் கண்கள் தூங்காது பாடிடும் எங்கள் உள்ளம் என்றும் ஓயாது காற்றில்லாமல் உலகில் உயிர் வாழாது நீரில்லாமல் பச்சை பயிர் செழிக்காது உம் ஜோதிச்சுடரில் ஒரு சுடராய் நானும் மாறுவேன் எம் நெஞ்சில் வைத்து என்றும் உம்மை போற்றி புகழுவேன்(நேசம் யாவும்)