நினைக்க நினைக்க இன்புறும் இதயம் இரஸுல் நபியின் பேரர் உதயம் நாடி நாடி அழைக்கும் அடிமை நாடும் நாட்டம் கொடுக்கும் புதுமை • இமைக்கு முன்னே இடரை அகற்ற இறைவன் தந்த பேராற்றல் அபயக் குரலில் அழைத்திட கேட்டால் அக்கண முதவும் அருளாற்றல் ஆகாயத்தின் மீதினிலும் ஆழ் கடலின் அடியினிலும் எதிரே வந்து இன்னல் அகற்றும் ஏந்தல் முஹ்யித்தீன் ஆண்டகயே இறைவனின் ஆணையால் இயங்கிடும் நேசரே இருவிழி குளிர்ந்திட இறங்கிடுவீர் நினைக்க நினைக்க இன்புறும் இதயம் இரஸுல் நபியின் பேரர் உதயம் நாடி நாடி அழைக்கும் அடிமை நாடும் நாட்டம் கொடுக்கும் புதுமை 1. வள்ளல் நபியின் பாதம் தனையே வாஞ்சை உடனே சுமந்த அவர்கள் அண்ணல் நபியின் அடி சுவட்டை அயர் ந்திடாமல் துயர்ந் தவர்கள் நல்லடியார் தோள் மீதில் தங்கள் பாதம் பதியும் என்றே வல்லவனே ஆணை யிடவே வாழ்வுடயோர் சுமந்தனரே நினைக்க நினைக்க இன்புறும் இதயம் இரஸுல் நபியின் பேரர் உதயம் நாடி நாடி அழைக்கும் அடிமை நாடும் நாட்டம் கொடுக்கும் புதுமை 2. மானிடர் யாவரும் நோன்பை நோக்கிட மழையின் முகிலது மதியை மறைக்க பாச நேசர் பிறந்த அன்றே பால்குடி மறுக்க பலவதிசயங்கள் தங்கள் விரதம் கண்டிடவே ஐயம் தீர்ந்து தெளிந்தனரே பாலர் பருவ ஞான மதையே பாரே திரும்பி பார்த்ததுவே நினைக்க நினைக்க இன்புறும் இதயம் இரஸுல் நபியின் பேரர் உதயம் நாடி நாடி அழைக்கும் அடிமை நாடும் நாட்டம் கொடுக்கும் புதுமை 3. கனவிலும் நினைவிலும் காதிரே வந்து கால் பதம் புஜத்தில் பதித்திடனும் விலாயத் என்னும் வியத்தகு படித்தரம் விரைந்தே அடைந்து உயர்ந்திடனும் காதிரின் மிதியால் ஸாஹிபின் குதியை இக்கவி சொல் காதிரி கண்டிடனும் இர்ஃபான் வேண்டியே இப்புகழ் பாடிடும் அவையோர் யாவரும் அடைந்திடனும் இறைவனின் ஆணையால் இயங்கிடும் நேசரே இருவிழி குளிர்ந்திட இறங்கிடுவீர்...

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2024 kayalislam.com | All Rights Reserved.