ஞானமுதமே மானிடர்க்கூட்டி
ஞாலந்தனிலே மாபுகழ் நாட்டி
கமழும் ஒலி நாதா... கருணைநன் நபிபேரா... கருணை நபிபேரா
(ஞானமுதமே)
கலையுறுஜீலான் பதிமீதே
கவினபு ஸாலிஹுமகவாக
நிலைபெற இஸுலாம் நெறிதர வந்த
நிதிமுஹியித்தீன் நாயகரே
(ஞானமுதமே)
பொய்புவியின்பம் மேலெனவே
பொலிவிழந்திருந்தோர் மனந்தனிலே
மெய்நிலையோங்க மூதுரை தந்த
மாமுஹியித்தீன் நாயகரே
(ஞானமுதமே)
தரைமிசை தவமார் ஒலிகளுக்கே
தலையெனதிகழும் மணிவிளக்கே
நிறைவுடனிஸுலாம் முறையினில் வாழ்ந்த
திருமுஹியித்தீன் நாயகரே
(ஞானமுதமே)
அப்துல்காதிறு எனும்பேரால்
அற்புதமாற்றிய ஒளிமேரே
இப்புவிதீனார் இதயத்திலுலவும்
எழில் முஹியித்தீன் நாயகரே
(ஞானமுதமே)
பெருவளஞ் சூழ்பகுதாததிலே
நறுமணம் வீசிடவதிபரே
மறுவேதிலாத மதியமதான
குருமுஹியித்தீன் நாயகரே
(ஞானமுதமே)