رسول ، حبيب ، رؤوف ، رحيم
بشير ، نذير ، منير ، محمد
مصطفى.....مجتبى
مرحبا......مرحبا ، (2)
حبيبي
ரஹ்மத்தாய் உதித்து ராஹத்தை அளிக்கும்بشير ، نذير ، منير ، محمد
مصطفى.....مجتبى
مرحبا......مرحبا ، (2)
حبيبي
ரஹ்மானின் ரசூல்
طوبي لطه الهني....(2)
கந்தம் கமழ்ந்திடவேசிந்தை தெளிவாகவே
விந்தை பல நிகழவே - வந்தோர்
يا طه الهني...طوبى لطاه الهني
சீராய் பிறந்த ரோஜா
சுடராய் ஒளிர்ந்த ராஜா (2)
செம்மல் நபியே ஹாஜா
ஜென்மம் ஜென்மமாக
ஜோதி நபி மீதிலே
பண் பாடி புகழ்ந்தோமே
يا طه الهني...طوبى لطاه الهني
ஆலம் தேடும் நாதர்
அகிலம் நாடும் நீதர் (2)
அன்பை பொழியும் வேந்தர்
ஆதி ஏகோனவன் அழகாய் வடித்த உருவே
அற்...புத நன்னபி வா....ரீர்
يا طه الهني...طوبى لطاه الهني
கண்ணின் ஒளியே காஸிம்
கல்பே கனியும் பாஸிம் (2)
என்னுள் நிலையும் யாஸீன்
சுமந்தோம் பொற்பாதத்தை
எம்மின் சிரம் மீதிலே
சு...மைகள் தீர்த்திட வா...ரீர்
يا طه الهني...طوبى لطاه الهني
مصطفى.....مجتبى
مرحبا......مرحبا ، (2)
حبيبي
مرحبا......مرحبا ، (2)
حبيبي
வில்லாய் வளைந்த புருவம்
என்னுள்ளம் பதித்த உருவம் (2)
சுபமே பொதிந்த சிற்பம்
திண்ணை தோழர்களுள் நானும்
பிறந்திருந்தால்
திரும்ப திரும்பவே
ரசித்திருப்பேன்
يا طه الهني...طوبى لطاه الهني
செக்கச் சிவந்த கன்னம்
அதை பக்கம் பார்க்க எண்ணம்(2)
அதில் சொக்கிப் போவதும் திண்ணம்
தங்கள் தலையனையாய் யானும்
ஆகிருந்தால்(2)
يا طه الهني...طوبى لطاه الهني
(ரஹ்மத்தாய்)