வாருங்கள் வாருங்கள் வள்ளல் வழி
தேடுங்கள் தேடுங்கள் மெய்யின் மொழி (2)
உண்மையை...
உரைத்திட...
நேர் வழி...
தழைத்திட...
உண்மையை உரைத்திட
நேர் வழி தழைத்திட
வாருங்கள் வாருங்கள்...
அண்ணல் நபி
என்றும் அணையா ஒளி - இறைவேதம் இயம்பும் நெறி
அடிமை வலி - நீக்க வகுத்த வழி
எல்லோரும் புரியும் படி
அண்ணலர் சொல்யாவும்
உயர்வின் விதி
பிசாகாமல் பேணினால் சுவனப்பதி
நன்மை பெற
வாழ்வில் உயர்வை தர
நாளும் நாம் பேணுவோம்
நாளெல்லாம் மகிழ்வோம்
வாருங்கள் வாருங்கள்...
ஏழை வரி
தானம் வழங்கும் நெறி - வறுமையை போக்கும் வழி
வட்டி இல்லை - மது புட்டி இல்லை
மடமை சிறுதுளியும் இல்லை
நிற உயர்வும் இல்லை
இன தாழ்வும் இல்லை
இறையச்சம் இல்லையேல் ஒன்றுமில்லை
இறை நேசம் பெற
சுவன் வாழ்வை தர
நாளும் நாம் பேணுவோம்
நாளெல்லாம் மகிழ்வோம்
வாருங்கள் வாருங்கள்...
வாருங்கள் வாருங்கள் வள்ளல் வழி
தேடுங்கள் தேடுங்கள் மெய்யின் மொழி (2)
உண்மையை...
உரைத்திட...
நேர் வழி...
தழைத்திட...
உண்மையை உரைத்திட
நேர் வழி தழைத்திட
வாருங்கள் வாருங்கள் வள்ளல் வழி
தேடுங்கள் தேடுங்கள் மெய்யின் மொழி